×

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு

டெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் முடிவு என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய வங்கி அமைப்பு தொடர்ந்து நிலையாகவும், மீட்பு திறன் கொண்டதாகவும் உள்ளது. விலைவாசி உயர்வு குறைந்து இருந்தாலும் தொடர்ந்து இலக்கிற்கு அதிகமாகவே உள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்பதால் வீட்டு கடன் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது:

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது. நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கணித்துள்ளார். பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரூ.2,000 நோட்டுகள் வாபஸால் பணப்புழக்கம் அதிகரிப்பு:

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்று வருவதால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும்:

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

The post வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : RBI ,Governor Shakti Kanthas ,Delhi ,Reserve Bank ,Governor Shakti ,Dinakaran ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு