பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூர் மாவட்டத்தில் கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் தற்போது வரை 197 விவசா யிகளின், 277.41 ஹெக்டர் தரிசு நிலங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டு விளைநிலங்க ளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். கலைஞரின் அனைத்து கி ராம ஒருங்கிணைந்த வே ளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தரிசு நிலங்களை விளைநிலங்க ளாக மேம்படுத்தும் திட்டத் தின் கீழ் விளைநிலமாக மாற்றுவதற்காக சிறுவாச் சூர் ஊராட்சியில் கண்டறி யப்பட்டுள்ள 10 ஏக்கர் தரிசு நிலத்தினை மாவட்டகலெ க்டர் கற்பகம் நேரில் பார் வையிட்டார். நிலத்தின் உரி மையாளர்களான விவசா யிகளிடம் இந்த நிலத்தை கலைஞரின் அனைத்து கி ராம ஒருங்கிணைந்த வே ளாண் வளர்ச்சித் திட்டத்தி ன் மூலம் திருத்தி, விவசாய த்திற்கு உகந்ததாக மாற்ற அரசாங்கம் உங்களுக்கு மு ழு உதவிகளையும் செய்யு ம் என்று மாவட்டகலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து பிர தம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் மானிய உதவியுடன் தெளி ப்பு நீர்ப் பாசனம் அமைக்க ப்பட்டுள்ள சம்மங்கி வய லைப் பார்வையிட்டபிறகு கலெக்டர் தெரிவித்ததாவ து :
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட த்தின் மூலம் 2021-2022 ம் நிதி ஆண்டில் 92 விவசா யிகளின் 154.66 ஹெக்டர் தரிசு நிலங்களும், 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 105 விவசாயிகளின் 122.75 ஹெக்டேர் தரிசு நிலங்க ளும் கண்டறியப்பட்டு அவ ற்றை விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.தரிசு நிலங்களை திருத்தி, விவசாயம் செய்ய தேவை யான நீர்வரத்திற்காக கி ணறு அமைத்தல், மோட்டா ர் அமைத்தல், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பா சன வசதிகள் செய்தல், பயி ரிடத் தேவையான தோட்டக் கலைப் பயிர்களுக்கான விதைகளை இலவசமாக வழங்குதல் என பல படிநி லைகளுடன் தரிசு நிலங் கள் விளைநிலங்களாக மா ற்றப்படுகின்றது.
நடப்பாண்டில் இத்திட்டத் தின் மூலம் சிறுகன்பூர், து.களத்தூர், எலந்தலப்ப ட்டி, தெரணி, கொளத்தூர், திம்மூர், நொச்சிக்குளம், கண்ணப்பாடி,கல்பாடி, சிறு வாச்சூர், சத்திரமனை, கள ரம்பட்டி, பெரியம்மாபாளை யம், தொண்டமாந்துறை, பெரியவடகரை, தழுதாழை, தொண்டப்பாடி, எறையூர், பெரியவெண்மணி, வடக்க லூர், அந்தூர், ஆண்டிக் குரு ம்பலூர், ஒதியம், குன்னம் ஆகிய கிராம ஊராட்சிக ளில் செயல்படுத்தப்படவு ள்ளது.
பிரதம மந்திரியின் நுண் ணீர் பாசனத் திட்டத்தின் மூலம், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசா யிகளுக்கு 75 சத மானிய மும் வழங்கப்பட்டு வருகி றது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்ட செயலாக்கத்திற்கு பெரம் பலூர் மாவட்டத்திற்கு ரூ 2040.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத் தின் கீழ் சொட்டு நீர் பாசன ம், தெளிப்பு நீர் பாசனம் மற் றும் மழைத்தூவான் போன் ற வசதிகள் ரூ374.30 லட்சம் மதிப்பீட்டில் 736 விவசாயிக ள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 736.68 எக்டர் விவசாய நிலங்கள் பயன் பெற்றுள்ளது குறிப்பிடத்த க்கது எனத்தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட கலெக்டரின் நேர் முகஉதவியாளர் (வேளாண்மை) ராணி, தோட்டக்கலை த்துறை துணை இயக்குநர் இந்திரா, ஊராட்சிகள் உத வி இயக்குநர் அருளாளன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியதர்ஷினி, பெரம்பலூ ர் தாசில்தார் கிருஷ்ணரா ஜ், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறி வழகன், ஸ்டாலின் செல்வ குமார், வேளாண்மை அலு வலர் அனு அர்ச்சனா உள் ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post 97 விவசாயிகளின் 277.41 ஹெக்டர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.