×

கம்பம் அருகே பாழடைந்த வனத்துறை கட்டிடம் அகற்றப்படுமா?

கம்பம், ஜூன் 8: கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் உள்ள வனத்துறையினரின் பாழடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் மேற்கு, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, ஆகிய வனச்சரகங்கள் இயற்கை வனக்கோட்டமாகவும், கூடலூர், கம்பம் கிழக்கு, சின்னமனூர், வருசநாடு, கண்டமனூர், மேகமலை வனச்சரகங்கள் மேகமலை வன உயிரின சரணாலயமாகவும் உள்ளது. இந்த வனப்பகுதியில் அரிய வகை மரங்களும், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுவதையும், மரங்களை வெட்டுவதை தடுக்க, வனச்சரகப் பகுதிகள் எல்லைகளாக பிரிக்கப்பட்டு வன ஊழியர்கள் ரோந்து சென்று வருகின்றனர்.

இதற்காக வன ஊழியர்களுக்கு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.இதில் கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்டப்பட்ட நாராயணத்தேவன் பட்டியில் வன ஊழியர்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்ததையடுத்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டித்தை அகற்றாமல், அந்த கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஊழியர்கள் தங்கி உள்ளனர். ஆனால் பழைய கட்டிடம் பயன்பாடின்றி பாலடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தை சுற்றி முட் செடிகள் வளர்ந்து மறைவாக உள்ளதால் சமூக விரோதிகள் மது பாராகவும், சீட்டு விளையாடும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர்.

பகல் நேரங்களில் சிறுவர்கள் விளையாடிவிட்டு ஓய்வு எடுப்பதற்காக இந்த கட்டிடத்தின் அருகில் அமர்கின்றனர். கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கம்பம் அருகே பாழடைந்த வனத்துறை கட்டிடம் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kambam ,Kampam ,Narayanathevanpatti ,Dinakaran ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...