×

அம்மன் கோயிலில் பால்குட விழா

திருப்புத்தூர், ஜூன் 8: திருப்புத்தூர் அருகே நடுவிக்கோட்டை மேலையூர் கிராமத்தில் அமைந்துள்ள உலகநாயகி அம்மன் கோயிலில் கடந்த மே 30ம் தேதி பூச்சொரிதல் திருவிழா நடைபெற்று அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு பத்து நாள் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்று வந்தது. 8ம் திருவிழாவான நேற்று முதன்தினம் மேலையூர் பிள்ளையார்கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர்.

பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குளியில் பக்தர்கள் இறங்கி வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

The post அம்மன் கோயிலில் பால்குட விழா appeared first on Dinakaran.

Tags : Balkuta Festival ,Amman Temple ,Tiruputhur ,Ulaganayaki Amman Temple ,Madhuvikkottai Melaiyur ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி