×

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 8 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம்

திருப்பூர், ஜூன் 8: திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி கழகம் சார்பில் 8 இடங்களில் தெருமுனை கூட்டம் நல்லூர் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

அதில் நல்லூர் பகுதி 56-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் 8-ம் தேதி (இன்று) கரூர் முரளி, 9ம் தேதி 48வது வார்டு நல்லூர் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவில் பவானி கண்ணன், 10ம் தேதி 47வது வார்டு முதலிபாலையம் பிரிவு கந்திலி கரிகாலன், 11ம் தேதி அன்று 46வது வார்டு காசிபாளையம் மற்றும் மணியகாரம்பாளையம் ஈரோடு இளையகோபால், 12ம் தேதி அன்று 49வது வார்டு வள்ளியம்மை நகர், சுப்பிரமணிய நகர் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். அதுசமயம் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

The post திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 8 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur North District ,DMK ,Tirupur ,DMK Tirupur North District ,Tirupur South Constituency ,MLA ,Selvaraj ,
× RELATED முதலமைச்சர் பிறந்தநாளை மாதம்...