×

அடிக்கடி மாயமாகும் நெல்லை-கல்விளை அரசு பஸ் தினமும் இயக்க கோரிக்கை

நாசரேத், ஜூன் 8: நெல்லையிலிருந்து தினமும் அரசு பஸ் புறப்பட்டு வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக கல்விளைக்கு செல்கிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் இந்த பஸ் கல்விளையிலிருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்கின்றன. இந்த பஸ் அடிக்கடி மாயமாகி விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த பஸ் முறையாக இயக்கப்படாததால் நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வங்கிகளில் பணிபுரியும் வைகுண்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அடிக்கடி மாயமாகும் நெல்லை- கல்விளை அரசு பஸ்சை தினமும் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், வங்கி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அடிக்கடி மாயமாகும் நெல்லை-கல்விளை அரசு பஸ் தினமும் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai-Kalvilai government ,Nazareth ,Nellai ,Vidylai ,Vaikundam ,Alvarthinagari ,Menjnanapuram.… ,Dinakaran ,
× RELATED நாசரேத்தில் ₹26 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம்