×

சென்னை ஓரகடத்தில் டாடா நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டாடா நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நாளை 08.06-2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரூ.762 கோடி மதிப்பில் Industry 4.0 வை சென்னை ஓரகடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் தொழிற்பயிற்சி நிலையங்களை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தொழில்துறை 4.0 நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும், மேம்படுத்தும் மற்றும் விநியோகிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அனலிட்டிக்ஸ் மற்றும் AI மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி வசதிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் முழுவதும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தொழிற் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியமாகும். தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக தொழ்ற்சாலைகளில் தேவைக்கேற்ப திறன் பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2021-22ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டு எதிர்காலத் தேவையினை பூர்த்தி செய்திட புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

மேலும், பயிற்றுநர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்கிட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

 

The post சென்னை ஓரகடத்தில் டாடா நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tata Company ,Oragadam, Chennai. ,Chennai ,M. K. Stalin ,Tata ,Oragadam, Chennai ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...