×

வேலூர் ஆவினில் பால் திருட்டு என எழுந்த புகார் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

வேலூர்: வேலூர் ஆவினில் பால் திருட்டு என எழுந்த புகார் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். குறைந்த ஊதியத்தில் சிறார்களை பணிக்கு அமர்த்தியதாக வந்தத் தகவல் முற்றிலும் புறம்பானது என்று தெரிவித்துள்ளார். ஆவினின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டோர்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வேலூரில் ஆவின் அதிகாரிகள் நடத்திய ஆய்வில்தான் பால் திருட்டு விவகாரம் தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்த தவறு நிகழ்வதையும் ஆவின் நிர்வாகம் அனுமதிக்காது என்று மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளை தடுக்க ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார், மேலும் சிறார்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஆவினில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ESI, PF வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், எனவும் சிறார்கள் தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post வேலூர் ஆவினில் பால் திருட்டு என எழுந்த புகார் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dairy Minister ,Mano Thangaraj ,Vellore Avinil ,Vellore ,Vellore Avin ,Vellur Avin ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...