×

தரங்கம்பாடி அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா

 

செம்பனார்கோயில், ஜூன்7: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சி கொங்கானோடை கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு 160 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். தர், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் காவேரி ஜெய்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் கிருபாவதி சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தரங்கம்பாடி அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Tharangambadi ,Sembanarcoil ,Konganodai ,Nalladai panchayat ,Tarangambadi, Mayiladuthurai district ,Tarangambadi ,Dinakaran ,
× RELATED திருக்கடையூரில் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்