×

திருகாம்புலியூரில் பகவதி அம்மன் கோயில் திருவிழா தூக்கு தேரில் அம்மன் வீதி உலா

 

கிருஷ்ணராயபுரம், ஜூன்7: கிருஷ்ணராயபுரம் அருகே திருகாம்புலியூரில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மன் தூக்கு தேரில் பக்தர்கள் சுமந்தவாறு வீதி உலா நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூரில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கரகம் பாலித்து தொடங்கியது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை அக்னி சட்டி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை தூக்குத்தேரில் பகவதி அம்மன் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் 100க்கும் மேற்பட்டோர் தோளில் சுமந்தவாறு பவனி வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post திருகாம்புலியூரில் பகவதி அம்மன் கோயில் திருவிழா தூக்கு தேரில் அம்மன் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Bhagavathy Amman temple festival ,Tirukambuliyur ,Amman ,Vethi ,Ula ,Krishnarayapuram ,Thirukambuliyur ,Krishnarayapuram, ,Amman Ula ,
× RELATED வெள்ளிக்கிழமை: அருள் தரும் அங்காள அம்மன் வழிபாடு..!!