×

ராஜபாளையத்தில் நகர போக்குவரத்துக் காவல் நிலையம் திறப்பு விழா

ராஜபாளையம், ஜூன் 7: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நகர போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டு திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

மேலும் ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் வட்டாட்சியர். ராமச்சந்திரன், மற்றும் போக்குவரத்துக் இன்ஸ்பெக்டர் லாவண்யா, ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் சார்லஸ்,  மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் தெற்குவெங்காநல்லூர் ஊராட்சி தலைவர் இசக்கி ராஜா மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையத்தில் நகர போக்குவரத்துக் காவல் நிலையம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : City Traffic Police ,Station ,Rajapalayam ,Virudhunagar district ,City Traffic Police Station ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா