×

ஓய்வு கண்டக்டர் தற்கொலை

 

விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் அருகே புல்லலக்கோட்டையை சேர்ந்தவர் கதிர்வேல் (62), இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் மனைவி இந்திராணி, துணி துவைத்து கொண்டிருந்த போது, கதிர்வேல் படுக்கை அறையில் அமர்ந்திருந்தார்.

8.30 மணியளவில் துணிகளை துவைத்து விட்டு மனைவி பெட்ரூம் சென்று பார்த்த போது கதிர்வேல் பேனில் டிவி வயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் கதிர்வேல் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மனைவி இந்திராணி புகாரில் விருதுநகர் ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஓய்வு கண்டக்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Kathirvel ,Pullalakottai ,Government Transport Corporation ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...