
- மாரியம்மன் கோயில் திருவிழா
- காரைக்குடி
- ஆண்டுதோறும்
- வைகாசி பொங்கல் திருவிழா
- காரைக்குடி பாப்பா ஊரணி மாரியம்மன் கோவில்
- பூக்குகி
- தின மலர்
காரைக்குடி, ஜூன் 7: காரைக்குடி பாப்பா ஊரணி மாரியம்மன் கோவில் 63ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா கடந்த 29ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5ம் தேதி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மது, முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், வேல்காவடி, பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
The post மாரியம்மன் கோயில் விழாவில் பூக்குழி இறங்கி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.