×

கிருஷ்ணகிரியில் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து

கிருஷ்ணகிரி, ஜூன் 7: கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி கார்னேசல் திடலில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்எல்ஏ.வுமான மதியழகன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் சித்ரா சந்திரசேகர், நாகராசன், பாலன், கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், சுப்பிரமணி, ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், குமரேசன், ரஜினிசெல்வம், குண.வசந்தரசு, அறிஞர், பேரூர் செயலாளர்கள் பாபு, பாபு சிவக்குமார், வெங்கட்டப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் மீன் ஜெயக்குமார், சீனிவாசன், பாலாஜி, செந்தில்குமார், பிர்தோஸ்கான், வேலுமணி, செந்தில், மதன்ராஜ், ரியாஸ் மற்றும் நிர்வாகிகள் கராமத், தினேஷ், திருமலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக தாரை தப்பட்டை முழங்க, ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் ஊர்வலமாக, பொதுமக்களை விருந்துக்கு அழைத்து வந்தனர்.

The post கிருஷ்ணகிரியில் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து appeared first on Dinakaran.

Tags : Biryani feast ,Krishnagiri ,East District DMK ,Chief Minister ,Karunanidhi ,Dinakaran ,
× RELATED சேலம் மாநாட்டில் திரளாக பங்கேற்க...