×

காங்கோ உதவி குழு ரூ.7.4கோடி மோசடி

டாகர்: அமெரிக்காவை சேர்ந்த கிவ் டைரக்ட்லி என்ற அமைப்பானது காங்கோ மக்களுக்கு உதவும் வகையில் உதவி குழுவை நடத்தி வருகின்றது. இந்நிலையில் காங்கோவில் இயங்கி வரும் இந்த குழுவின் உறுப்பினர்கள் ரூ.7.4கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இந்த அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. காங்கோவின் பாதுகாப்பற்ற தொலைதூர பகுதிகளில் பணியாற்றுவதற்காக கட்டண செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட மாற்றத்தை பயன்படுத்தி உறுப்பினர்கள் இந்த பணமோசடியில் ஈடுபட்டதை அமைப்பு கண்டறிந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் சிறு தொகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மோசடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பணத்தை பெறுவதை உறுதி செய்வதற்காக அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

The post காங்கோ உதவி குழு ரூ.7.4கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Dakar ,Give Directly from America ,Congo ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...