×

ஆழியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்காக இன்று (7ம் தேதி) முதல் 15.10.2023 முடிய தொடர்ந்து 130 நாட்களுக்கு ஆழியாறு அணையில் இருந்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆழியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Azhiyar dam ,Chennai ,Coimbatore ,Water Resources Department ,Sandeep Saxena ,Dinakaran ,
× RELATED பெயர் நீக்கப்பட்டவர்கள் வாக்களிக்க...