×

தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; கல்வியில் அரசியலை புகுத்தும் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்

சென்னை: உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு சிறந்த விளங்குகிறது என்று கூறியுள்ள அமைச்சர் பொன்முடி கல்வியில் அரசியலை புகுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார். துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் உயர்கல்வி துறை குறித்து விமர்சித்து இருந்த நிலையில் அதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் திறனை வளர்க்க முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறிய அமைச்சர் பொன்முடி, அந்த திட்டத்தை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்ததாக கூறும் ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்தார் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கல்வியில் அரசியலை புகுத்த ஆளுநர் ரவி முயற்சிப்பதாக விமரிசித்துள்ள அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை என்பதால் ஆளுநர் மூலமாக கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; கல்வியில் அரசியலை புகுத்தும் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Governor ,Minister ,Ponmudi ,Chennai ,Governor RN ,Ravi ,
× RELATED தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரை விரைவில் நியமிக்க முடிவு?