×

ரயிலில் புகை; ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு

பிரம்மபூர்: ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து திடீரென வெளியேறிய புகையால் பரபரப்பு நிலவியது. B-5 பயணிகள் பெட்டியின் ஏசி யூனிட்டில் இருந்து வெளியேறிய புகையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ரயில் ஒடிசாவின் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடனடியாக புகையை கட்டுப்படுத்திய போதிலும், சம்பந்தப்பட்ட பெட்டியில் பயணிக்க, பயணிகள் மறுப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் பயணிகள் ஏறியதும், 45 நிமிடங்கள் கழித்து ரயில் மீண்டும் புறப்பட்டுள்ளது.

The post ரயிலில் புகை; ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Odissa ,Brahmapur ,Odisha ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப்பை...