×

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி விஷமத்தனமான கருத்து: தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப் படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார்.

ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வெளிநாட்டு முதலீடுகள் பற்றி விஷமத்தனமான கருத்து: தமிழ்நாட்டின் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,Chennai ,University Vice Chancellors Conference ,University's Vice Chancellors Conference ,R. N.N. Ravi ,
× RELATED தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம்...