×

சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் யூடியூபரின் சாகச வீடியோ: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அரபிக்கடல் நீரில் ஓட்டிய யூடியூபர்

கோவா: ஓலா எஸ்ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அரபிக்கடல் நீரில் ஓட்டி பரிசோதித்த யூடியூபரின் செயல் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஓலா எஸ்ஒன் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தண்ணீரிலும் இயக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆனால் கடல் உப்பு நீரில் எப்படி செயல்படும் என்பது யாருக்கும் தெரியாது. இதனையே தன்னுடைய சோதனையின் வாயிலாக சோதித்து பார்த்திருக்கிறார் யூடியூபர் அகில்.

சமூக வலைத்தளங்களில் லைக்குகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக யூடியூபர்கள் பல்வேறு சாகசங்கள் செய்து வரும் நிலையில், இருசக்கர வாகனங்களை கொண்டு சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு வரும் கோவாவை சேர்ந்த அகில், ஓலா எஸ்ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் திறனை சோதிக்கும் விதமாக அதனை அரபிக்கடலில் இடுப்பளவு நீரில் ஓட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த காணொளி 10லட்சம் பார்வைகளை தாண்டி பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் சுசூகி, யமஹா ஆர்15, ராயல் எண்பீல்டு, ஹிமாலயன் பைக்குகளை கடல் நீரில் ஒட்டி சாகசம் செய்துள்ளார்.

The post சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் யூடியூபரின் சாகச வீடியோ: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அரபிக்கடல் நீரில் ஓட்டிய யூடியூபர் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Arabian Sea ,Ola ,Ola… ,Dinakaran ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்