×

பெங்களூரு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பழிவாங்கும் அரசியலை விரும்பவில்லை: துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உறுதி

பெங்களூரு: எனக்கு பழிவாங்கும் அரசியல் அவசியமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதாவில் பெங்களூரு மாநகரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் டி.கே.சிவகுமார் பேசும்போது, நாம் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். பெங்களூரு மாநகரை சர்வதேச அளவில் மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நமது இலக்காக உள்ளது. நாம் அரசியலை விட்டு விட்டு மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனக்கு பழிவாங்கும் அரசியல் அவசியமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் என்னிடம் மோத யார் விரும்பினாலும் சந்திக்க தயாராக இருப்பேன் அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பெங்களூரு வளர்ச்சிக்கு நாம் அனைவரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

The post பெங்களூரு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பழிவாங்கும் அரசியலை விரும்பவில்லை: துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உறுதி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Deputy Chief Minister ,TK Sivakumar ,Deputy Principal ,DK Sivakumar ,Vidanasauda Bangalore ,Dinakaran ,
× RELATED காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை...