×

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு

சென்னை: பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. பொது கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் இந்த இடங்கள் நிரப்பப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான இன்ஜினியரிங் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 24ம் தேதி வரை நடக்கிறது. இன்ஜினியரிங் படிப்பில் சேர மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் விண்ணப்ப கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 20,306 பேர் அதிகம். எனினும் விண்ணப்பங்களை 9ம் தேதி வரை பதிவேற்றலாம். இந்நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று ஒதுக்கப்பட உள்ளது. சான்று சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் 20ம் தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26ம் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

The post பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Directorate of Technical Education ,Anna ,Tamil Nadu ,
× RELATED சென்னை அண்ணா நகரில் மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!!