
- மெல்மருவத்தூர் ஊராட்சி
- பஞ்சாயத்து கவுன்சில்
- செங்கல்பட்டு மாவட்டம்
- சித்தாமூர் ஒன்றியம்
- மேல்மருவத்தூர்
- பஞ்சாயத்து
- சிட்டமூர்
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சியில், நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெ.லட்சுமி தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் அகத்தியன் முன்னிலை வகித்தார்.முன்னதாக முழு சுகாதார வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமான ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள்,பொது இடங்கள் குளங்கள்,ஏரிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊராட்சியின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊராட்சி பணியாளர்கள்,மகளிர் குழுவினர்,கிராம மக்கள், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் எனும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட இயக்குனர் இந்து பாபா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், வெங்கடேசன் முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி ரமேஷ்,ஊராட்சி செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மேல்மருவத்தூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி: ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.