×

‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் மையக்கருவாக ‘நெகிழி மாசுபாட்டை வெல்லுங்கள்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

The post ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : back job ,CM G.K. ,Chennai ,-jabbay ,CM. G.K. Stalin ,Tamil Nadu ,President ,G.K. Stalin ,in ,back job' ,CM G.K. Stalin ,Dinakaran ,
× RELATED நூலகங்களுக்கு நூல்கள் வாங்க...