×

மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளாலான கலை வண்ணப் பூங்கா: சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது

மூணாறு: மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட ‘அப்சைக்கிள்’ பூங்கா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில், கொச்சி-தனுஷ்கோடி தேசிய சாலை அருகே, பழைய மூணாறில் ‘பிளாஸ்டிக் மூணாறு பஞ்சாயத்து’ தலைமையில் அப் சைக்கிள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் தூக்கி வீசும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வாகனங்களின் வீணான உதிரி பாகங்கள், பழைய பிளாஸ்டிக் டயர்கள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை ஆகியவற்றை உபயோகித்து அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மூணாறு சந்திப்பில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு ‘அப்சைக்கிள் பார்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பூங்காவில் பழைய டயர்களால் வடிவமைக்கப்பட்ட நடைபாதை, 30 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இருக்கைகள், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளால் உருவாக்கப்பட்ட யானையின் மிகப்பெரிய சிலை, மான், வரையாடு, தவளைகள் மற்றும் நீரில் வாழக்கூடிய உயிரினங்கள் வாழ்வதற்கேற்ப தண்ணீர் தொட்டிகள், மூணாறில் மட்டுமே காணப்படும் அரிய வகை தாவரங்களின் செடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செய்யப்பட்ட பெரிய பூக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஹரித கேரள மிஷன், மூணாறு ஊராட்சி, ஹில்தாரி ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த பூங்காவை தயார் செய்துள்ளனர். நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள டைல்களும் பார்க்கில் அமரும் இடங்களும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. காட்டு யானை, காட்டு எருமை, ரயில் பெட்டி இன்ஜின் போன்றவற்றின் மாதிரிகளையும் கலைஞர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு மிக அற்புதமாக உருவாக்கியுள்ளனர். மூணாறின் நுழைவுப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு ‘ஐ லவ் மூணாறு’ என்று அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்டில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த பூங்கா பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், சுற்றுலா பயணிகள் மூணாறின் இயற்கை அழகை கண்டு ரசித்துவிட்டு அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற வகையில் ஒரு மாறுபட்ட நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

The post மூணாறில் பிளாஸ்டிக் கழிவுகளாலான கலை வண்ணப் பூங்கா: சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது appeared first on Dinakaran.

Tags : Moonar ,Moonaru ,Kerala State ,Ikkki ,Moonamaur ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...