×

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாரியர் கார்கள் விற்பனை; டாடா நிறுவனம் அறிவிப்பு

டாடா நிறுவனத்தின் முதலாவது எஸ்யுவியாக ஹாரியர் எஸ்யுவி 2019ல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் உள்ள 2 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக் கூடியது. முதலாண்டில் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டும் வெளிவந்தது. அடுத்த ஆண்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இதில் புதிய அம்சங்களாக 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளது. மேலும், அடாஸ் தொழில்நுட்பமும் இடம்பெற்றுளளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.24.07 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாரியர் கார்கள் விற்பனையாகியுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாரியர் கார்கள் விற்பனை; டாடா நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tata ,Dinakaran ,
× RELATED டாடா நெக்சான் பேஸ்லிப்ட் கார்கள்