×

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் உலக நாடுகள் இந்தியாவுடன் நிற்கிறது: நமீபியாவில் ஜெய்சங்கர் உரை

விண்ட்ஹோக்: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் உலக நாடுகள் இந்தியாவுடன் நிற்கிறது என்று நமீபியாவில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஆப்ரிக்க நாடான நமீபியா சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்ேகற்றார். அப்போது அவர் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே ஆற்றிய உரையில், ‘உலக தலைவர்களும், இங்குள்ள வெளியுறவு அமைச்சரும் (நமீபியா) ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து சம்பவத்தில் இந்தியாவிற்கு ஆதரவாகவும், தங்களது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய உலகம் எவ்வாறு உலகமயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கும், உலகம் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்துள்ளது என்பதற்கும் ஒடிசா சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்தியாவில் நடந்த சோகமாக சம்பவத்திற்கு, இன்று உலகமே இந்தியாவுடன் நிற்கிறது. பல நாட்டு தலைவர்களும், வெளியுறவு அமைச்சர்களும், வெளிநாட்டு நண்பர்களும், ஆலோசகர்களும் என்னை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தனர்’ என்று கூறினார்.

The post ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் உலக நாடுகள் இந்தியாவுடன் நிற்கிறது: நமீபியாவில் ஜெய்சங்கர் உரை appeared first on Dinakaran.

Tags : India ,Odisha ,train crash ,Jaishankar ,Namibia Windhoek ,Odisha train accident ,foreign minister ,Namibia ,
× RELATED இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!!