×

எதிரே வருபவர்களின் கண் கூசுவதை தடுக்க வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்-போலீசார் கண்காணிக்க கோரிக்கை

நாட்றம்பள்ளி : எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசுவதை தடுக்க, வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் வாகனங்களுக்கு வாகன சட்ட முறைப்படி முகப்பு விளக்கிற்கு நடுவில் கருப்பு பெயின்ட் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் இதுபோன்று வாகன முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கரோ அல்லது கருப்பு பெயின்ட் எதுவும் ஒட்டாமல் அப்படியே இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளிர விட்டு ஓட்டி செல்கின்றனர். இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசுவதுடன் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும், பல வாகனங்களில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதால் அதிகமாக கண் கூசுவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இதுபோன்று எல்இடி பல்ப் பொருத்தப்பட்டுள்ள வாகன ஓட்டிகள் மீதும், கருப்பு ஸ்டிக்கர் அல்லது பெயின்ட் ஒட்டாத ஓட்டுநர்கள் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எதிரே வருபவர்களின் கண் கூசுவதை தடுக்க வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்-போலீசார் கண்காணிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...