×

நரிக்குடி அருகே 2 காளைகள் மாயம்

 

காரியாபட்டி, ஜூன் 5: நரிக்குடி அருகே நாலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (46). இவர் நாலூர் கிராமத்தில் சரவணன் என்பவர் தோட்டத்தையும், கடுக்காய் குளம் கிராமத்தில் குமார் என்பவர் தோட்டத்தையும் பாதுகாத்து தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடுக்காய் குளம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். தான் வளர்த்த இரண்டு காளை மாடுகளை இரவு கட்டிவிட்டு தூங்கியவர், காலை எழுந்து பார்த்த போது இரண்டு காளை மாடுகளையும் காணவில்லை . இதுகுறித்து நரிக்குடி போலீசில் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

The post நரிக்குடி அருகே 2 காளைகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Narikudi ,Kariyapatti ,Muthukumar ,Nalur village ,Saravanan ,Nalur ,Dinakaran ,
× RELATED பேருந்து நிறுத்தங்களில் தற்காலிக...