×

கம்பத்தில் கிறிஸ்தவர்கள் போராட்டம்

 

கம்பம், ஜூன் 5: கம்பத்தில் சிஎஸ்ஐ உயிர்த்தெழுதல் ஆலயம் உள்ளது. நூற்றாண்டுக்குமேல் பழமைவாய்ந்த இந்த ஆலயத்திற்குட்டுப்பட்ட 9 கிளை ஆலயங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்த ஆலயத்தில் இமானுவேல் அருண்ராஜ் என்ற போதகர் 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் இமானுவேல் அருண் ராஜனை மதுரை ராமநாதபுரம் மண்டல சிஎஸ்ஐ திருச்சபை மதுரை கிராஸ் தேவாலயத்திற்கு இடமாற்றம் செய்தது.

இதனை கண்டித்து கிறிஸ்தவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் வடக்கு போலீசார் இரு தரப்பினரும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மதுரை ராமநாதபுரம் மண்டல சிஎஸ்ஐ திருச்சபையில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சுமூக தீர்வு காண அறிவுறுத்தினர். இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post கம்பத்தில் கிறிஸ்தவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Christians ,Kambam ,CSI Resurrection Temple ,
× RELATED உடல் உறுப்பு தானம் செய்த மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல்