×

மின்சாரம் தாக்கி இறந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதியுதவி

 

பரமக்குடி, ஜூன் 5: பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எம்எல்ஏ முருகேசன் நிதியுதவி வழங்கினார். பரமக்குடி அருகே குறிஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். மூன்று தினங்களுக்கு முன்பு டிவியை ஆன் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். இது குறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். உடன் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் ரவி, பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post மின்சாரம் தாக்கி இறந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,MLA Murugesan ,Paramakudi… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை