×

கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் முற்றுகை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், ெகாடைக்கானலில் விடுமுறைநாளான நேற்று அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள், நேற்று பகலில் கொஞ்சம் வெயில், மாலையில் சாரல் மழை என மாறி மாறி நிலவிய சீதோஷ்ண நிலையை வெகுவாக ரசித்து அனுபவித்தனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஊட்டி: விடுமுறை நாளான நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய கடும் போட்டி நிலவியது. தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் கார்டன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் மொய்த்தது. நேற்று மதியம் 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்ததால் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்தது.

The post கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Ooty ,Dindigul district ,Ekadaikanal ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...