×

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7.15 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275 தான் என்றும் ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறியுள்ளார். மேலும், 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியினை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இதன்படி ரயில் விபத்தில் உயிரிழந்த குருமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உதவித்தொகையுடன் கூடுதலாக இந்த இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Odisha train accident ,Andhra Chief Minister ,Jagan Mohan Reddy ,Amaravati ,Jagan ,Odisha train ,Dinakaran ,
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...