×

கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் அப்துல்வஹாப் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை துணை மேயர் கேஆர் ராஜூ, திமுகவினர் பங்கேற்பு

நெல்லை, ஜூன் 4: கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வஹாப் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வஹாப் தலைமையில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல நெல்லை டவுன் வாகையடி முனையில் கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியிலும் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகளில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கேஆர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் தர்மன், மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர், பாளை. மண்டல சேர்மன் பிரான்சிஸ், மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு பாண்டியன், முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் ரைமண்ட், ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், கந்தன், டாக்டர் சங்கர், மாரியப்பன், மன்சூர், அஜய், அனார்கலி,சகாய ஜீலியட் மேரி, ஷபி அமீர் பாத்து, சின்னத்தாய், மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் காசிம், சுரேஷ், முபீன் இஸ்மாயில், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மேலப்பாளையம் பகுதி துணைச் செயலாளரும், 48வது வார்டு கவுன்சிலருமான ஆமீனா சாதிக், தொமுச மாவட்ட செயலாளரும், நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான சைபுதீன், மேலப்பாளையம் இளைஞரணி அமைப்பாளர் சாலி மவுலானா, 47வது வார்டு கவுன்சிலரும், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளருமான சபி அமீர்பாத்து, 47வது வார்டு பிரதிநிதி புகாரி, 50வது வார்டு பிரதிநிதி ஷேக் உஸ்மானி, 44வது வார்டு பெரோஸ்கான், மேலப்பாளையம் பகுதி அவைத்தலைவர் ஆடிட்டர் உமா மகேசுவரன், சிறுபான்மை பிரிவு நாகூர் மீரான் ஜெய்லானி, வட்டச் செயலாளர்கள் செய்யது முகைதீன், பாபுகுமார், மேகை செல்வம், பி.பி.ராஜா, பிரேம் கணேசன், பேபி கோபால், தென்கரை முத்து, அருள், ஈஸ்வரமூர்த்தி, டாஸ்மாக் தொமுச அரசன் ராஜ், வழக்கறிஞர்கள் அருள்மாணிக்கம், சண்முகஜெகன், ஜாகீர் உசேன், சிவா, இனியன், வர்த்தக அணி மைதீன் மல்கர், பகுதி துணை செயலாளர்கள் பாபா மூக்கையா, அப்துல் சுபஹாணி, சீனிவாசன், சுப்பையா, முருகப்பெருமாள், மாநகர பிரதிநிதி ஆஷிக், பொறியாளர் அணி சாய் பாபா, விவசாய அணி கால்வாய் துரை பாண்டியன், குறிச்சி ஆனந்த், கலையரசன், வண்ணை நிதீஷ், பாளை சதீஷ், ஹரி, வாசுகி செல்லத்துரை, மைதீன், வட்டப் பிரதிநிதிகள் நெல்லையப்பன், மாய கிருஷ்ணன், மாரிச்சாமி, திருவடி முத்து, சீனிவாசன், குற்றாலிங்கம், ஷேக், கணேச பெருமாள், வேலாயுதம், பேட்டை கனி, ரெங்கா கண்ணன், இளைஞர் அணி துர்க்கா ராம், ஒன்றிய இளைஞர் அணி சாமுவேல், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா, துணை அமைப்பாளர் பவானி, தேவிகா, மகளிரணி சௌந்திரம் முத்துராஜ், ஹமீதா, பிந்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நடந்தது.

விழாவுக்குத் தலைமை வகித்த கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாணவரணி ஆறுமுகராஜா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினார். இதைத்தொடர்ந்து பேரங்காடி ஐயப்பன், திருநாவுக்கரசு, குண்டு பாண்டியன்,விஜயகுமார், சந்நியாசி, ராஜலட்சுமி, முத்தையா, கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் மேலப்பாளையம் ஞானியார் அப்பா நகர் அருகே நடந்த கலைஞரின் 100வது பிறந்தநாள் விழாவுக்கு மேலப்பாளையம் பகுதி திமுக துணைச்செயலாளரும், 48வது வார்டு கவுன்சிலருமான ஆமீனாசாதிக் தலைமை வகித்தார். தொமுச மாவட்ட செயலாளரும், நெசவாளரணி துணை அமைப்பாளருமான முகமது சைபுதீன், இளைஞரணி பகுதி அமைப்பாளர் சாலி மவுலானா, மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் 47வது வார்டு கவுன்சிலர் ஷபி அமீர்பாத்து முன்னிலை வகித்தனர்.

திமுக மூத்த தலைவர் கி.மு.சாகுல்ஹமீது மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் 47வது வார்டு பிரதிநிதி புகாரி, இளைஞரணி ஜபருல்லா, 50வது வார்டு பிரதிநிதிகள் சிக்கந்தர், சேக்உஸ்மானி, 44வது வார்டு பெரோஸ்கான், இபி ஜாபர், பூல்பாண்டி, சபை உறுப்பினர் பாரிசாகுல், கவுஸ்மைதீன், அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றர். 48வது வார்டு இளைஞரணி அபுல்ஹசன் நன்றி கூறினார். இதே போல் நெல்லையில் தொமுச சார்பில் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி வண்ணார்பேட்டையில் உள்ள தொமுச பேரவை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு பேரவை செயலாளர் தர்மன் தலைமையில் அமைப்பு சாரா தொமுச மாவட்டச் செயலாளர் முகமது சைபுதீன், மகாவிஷ்ணு, துரை எபநேசர், சுடலைமுத்து, சண்முகசுந்தரம், சுந்தர்ராஜ், சாமுவேல் பாலசுந்தர், ஐசக், கொம்பன், வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் அப்துல்வஹாப் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை துணை மேயர் கேஆர் ராஜூ, திமுகவினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Abdulwahab ,MLA ,Deputy Mayor ,KR Raju ,DMK ,Nellai ,Palayangottai ,
× RELATED உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு,...