×

ரயில் பட்ஜெட் பொதுபட்ஜெட்டுடன் இணைத்துவிட்டது சாலைகள் அமைக்க அதிகநிதி ரயில் பாதுகாப்பில் அலட்சியம்: நிபுணர்கள் கருத்து

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம், ரயில்வேயை நவீனப்படுத்துவதில் ஒன்றிய அரசு காட்டும் ஆர்வம், பாதுகாப்பில் இல்லாததே என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒன்றிய பாஜ அரசு, சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்காக தரமான சாலைகள், உயர்தர பாலங்கள் கட்டுகிறது. அதற்காக பல்லாயிரம் கோடி நிதியை ஒவ்வொரு ஆண்டும் செலவிடுகிறது. ஆனால் இந்த அக்கறையை ரயில்வே பாதுகாப்பில் காட்டுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள். மேலும் ரயில்வேக்கு என்று தனியாக பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசு அதையும் நிறுத்தி ஒன்றிய பட்ஜெட்டுடன் இணைத்து விட்டது.

இதுபற்றி நிபுணர் கள்கூறியதாவது: உலகிலேயே 4வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் 1.3 கோடி பேர் ரயிலில் பயணிக்கின்றனர். 150 கோடி டன் சரக்குகள் ரயில்களில் எடுத்து செல்லப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ரயில்வேயை வருமானம் ஈட்டும் தொழிலாக மட்டுமே அரசு பார்க்கிறது. ரயில்வே நவீனப்படுத்துவம் போது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை ஒடிசா ரயில் விபத்து காட்டி உள்ளது.

கடந்த 2017-18ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரயில்வேயின் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடிக்கு 5 ஆண்டு நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நிதியை ரயில்வே அமைச்சகம் பயன்படுத்தாமல், 2028 வரை நீட்டித்துள்ளது. அப்படியானால், பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு மக்கள் இன்னும் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டுமா? நவீனத்துவத்தை போலவே பாதுகாப்பிலும் அக்கறை காட்ட வேண்டும்.

The post ரயில் பட்ஜெட் பொதுபட்ஜெட்டுடன் இணைத்துவிட்டது சாலைகள் அமைக்க அதிகநிதி ரயில் பாதுகாப்பில் அலட்சியம்: நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Odisha ,Union government ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை