×

ஆளுநர் ரவி 6 நாள் பயணமாக ஊட்டி வந்தார்

ஊட்டி: தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டி வந்தார். தாவரவியல் பூங்கா அருகே ராஜ்பவன் மாளிகையில் தங்கினார். நாளை தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடக்கிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். தொடர்ந்து, 8ம் தேதி வரை அங்கு தங்குகிறார். 9ம் தேதி சென்னை திரும்புகிறார். ஆளுநர் வருகைக்காக நேற்று மாலை ஊட்டி – கோத்தகிரி சாலை, கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

The post ஆளுநர் ரவி 6 நாள் பயணமாக ஊட்டி வந்தார் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Ooty ,Tamil Nadu ,Governor RN Ravi ,Coimbatore ,Chennai ,
× RELATED ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக...