×

மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரல் நியமனம்

சென்னை: மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரலாக ஜஹீர் அஹ்மத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர். புதுடெல்லியில் உள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய யுனானி ஆராய்ச்சி கழகத்தின் புதிய தலைமை இயக்குநர் ஜெனரலாக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் என்.ஜஹீர் அஹ்மத் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 40 ஆண்டுகால வரலாற்றில் தலைமை இயக்குநர் பதவியை அடைவது இதுவே முதல் முறை. சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் யுனானி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குநராக‌ ஜஹீர் அஹ்மத் பதவி வகித்து வந்தார். இவர் ராயபுரத்தை பூர்வீகமாக‌க் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மத்திய யுனானி ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் ஜெனரல் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Central Unani Research Institute ,Chennai ,Zaheer Ahmed ,General ,Madhya Unani Research Institute ,Chennai Rayapuram.… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...