×

ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த உற்சவம்: நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி நேற்று நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவ விழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. தினமும் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவில் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவத்தின் 7ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கோயில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் சென்றடைந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் 9ம் நாளான நாளை (4ம் தேதி) மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் தங்கக் குதிரைவாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் வசந்த மண்டபத்திற்கு இரவு 7.45 மணிக்கு வந்தடைகிறார். அங்கு இரவு 8.30 மணிமுதல் 10.30 மணிவரை திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 11.15 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 12 மணிக்கு மூலஸ்தானத்தை அடைகிறார். இத்துடன் விழா நிறைவடைகிறது.

The post ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த உற்சவம்: நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார் appeared first on Dinakaran.

Tags : Spring Festival ,Srirangam Temple ,Trichy ,Vasant Utsavam ,Srirangam Ranganatha Temple ,Namperumal ,Bhuloka Vaikundam… ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...