×

“நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது’’; மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் ஆந்திரா செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு பொக்குவரத்துக் கழகம் திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் இயங்கும் பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் ஆந்திரா மாநிலத்தை நோக்கி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்போது மாதவரம் பேருந்து நிலைத்திற்குள்ளே செல்லாமல் மாதவரம் ரவுண்டானா நிறுத்தத்திலேயே பயணிகளை ஏற்றி இறக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் பேருந்துகள் கோயம்பேடு காய்கனி அங்காடி பேருந்து நிலையத்தின் வெளியே வந்து செல்லும்போது மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வெளியே ரவுண்டானா நிறுத்தத்தில் நிறுத்தாமல் மாதவரம் பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி பொன்னேரி பணிமனையில் இருந்து சுண்ணாம்புகுளம் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்து எண் 90ஏ என்ற பேருந்தும் அண்ணாமலைச்சேரி முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்து எண் 90 ஏ/ஏ என்ற பேருந்தும தேர்வாய் முதல் கோயம்பேடு வரை செல்லும் 113 ஏ/ஏ என்ற பேருந்தும் கல்லூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் 90 பி என்ற பேருந்தும் செயல்படும்.ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து பிளேஸ்பாளையம் முதல் கோயம்பேடு வரை செல்லும் 101 ஏ/ஏ என்ற பேருந்தும் சத்தியவேடு முதல் கோயம்பேடு வரை செல்லும் 112 ஏ/ஏ என்ற பேருந்தும் புத்தூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் 125 ஏ என்ற பேருந்தும் மாதர்பாக்கம் முதல் கோயம்பேடு வரை செல்லும் 131 ஏ/ஏ என்ற பேருந்தும் மையூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் 79 ஐ என்ற பேருந்தும் முக்கரம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை செல்லும் 79 வி என்ற பேருந்தும் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post “நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது’’; மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் ஆந்திரா செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Mathavaram ,Transport Corporation ,Thiruvallur ,Tamil Nadu Government Transport Corporation ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...