
- கிளௌடாடு அணை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வைகோ
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- கிளவுடாடு
- அணை
- மதிமுகா
- பொது செயலாளர்
- வைகோ
- கிளவுடா அணை
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதிக்கமாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது, அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கர்நாடக துணை முதல்வர் கூறி இருக்கிறார். இது கண்டனத்துக்கு உரியது. உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும். எனவே ஒன்றிய அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக்கொள்வதை ஏற்கவே முடியாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
The post மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டின் மரபு உரிமை பறிபோக அனுமதிக்க மாட்டோம்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.