×

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் விளம்பர தூதரானார் நடிகை ஜோதிகா

சென்னை: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னணி தங்க நகை வணிக நிறுவனமாக, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் உள்ளது. இந்நிறுவனம், புதிய விளம்பர தூதராக பிரபல நடிகை ஜோதிகாவை நியமித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிவர்சபிள் தங்க நகையான ‘ஸ்வர்ண லக் ஷ்ண கலெக்‌ஷனுக்கு’ பிரேத்யகமான விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ரிவர்சபிள் தங்க நகை வியப்பூட்டும் 2 விதமான கலைநய படைப்பை இரண்டு பக்கம் கொண்ட தனித்துவமான தங்க நகை கலெக்‌ஷன் ஆகும். பொதுவாக, ரிவர்சபிள் நகையில், எளிமையான வடிவமைப்பும், இருபக்கமும் வெவ்வேறு நிறங்களில் கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், ஸ்வர்ண லக் ஷ்ண கலெக்‌ஷன் முற்றிலும் மாறுபட்டது. இதில், ஒருபக்கம் உயரிய இத்தாலியன் கலைநய வடிவமைப்பிலும், மறுபக்கம் உன்னதமான ஆன்ட்டிக் கலைநய வடிவமைப்பிலும் தனித்துவமாக உயிரூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜோதிகா கூறுகையில், ‘‘சிறந்த தரம், தனித்துவமான டிசைன்கள், அளவில்லாத கலெக்‌ஷன்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இணையில்லா சேவை அளிப்பதிலும் புகழ்பெற்ற போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நிறுவனத்தின் முகமாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். போத்தீஸ் தமது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான டிசைன்களை வழங்குவதில் எப்போதும் முன்னணி நிறுவனமாக உள்ளது’’ என்றார்.

போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் போத்தீஸ் ரமேஷ் கூறுகையில், ‘‘தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில், தனித்துவமான ரிவர்சபிள் தங்க நகை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பை தரும்’’ என்றார். ஸ்வர்ண லக்‌ஷணா கலெக்‌ஷனில் ஹாரம், மணப்பெண் செட்டுகள் தவிர 8 கிராம் கம்மல், 16 கிராம் பிரேஸ்லெட், 24 கிராம் நெக்லஸ் போன்றவை உள்ளன. சென்னை குரோம்பேட்டை, திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் போத்தீஸ் ஸ்வர்ண மகால் ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்.

The post போத்தீஸ் ஸ்வர்ண மஹால் விளம்பர தூதரானார் நடிகை ஜோதிகா appeared first on Dinakaran.

Tags : Jyotika ,Bodhis Swarna Mahal ,CHENNAI ,Tamil Nadu ,Kerala ,
× RELATED ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!!