×

செளகார்பேட்டை, பைராகி மடம், வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்பு

சென்னை: செளகார்பேட்டை, பைராகி மடம், வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் பகட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (02.06.2023) சென்னை, செளகார்பேட்டை, பைராகி மடம் வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பீட்டிலான இடம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, செளகார்பேட்டை, பைராகி மடம் அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமாக 4,446 சதுரடி பரப்பிலான கட்டிடங்கள் N.S.C போஸ் ரோடு மற்றும் சென்ட்ரல் முத்தையா தெருவில் அமைந்துள்ளது. இதனை 8 நபர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்ததால் சட்டப்பிரிவு 78-ன்படி சென்னை இணை ஆணையர் (மண்டலம் – 1) அவர்களின் உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் எம். பாஸ்கரன் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் திவ்யா, ஆய்வாளர் சம்பத் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post செளகார்பேட்டை, பைராகி மடம், வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்பு appeared first on Dinakaran.

Tags : Selakarpet ,Pyraki Monastam ,Venkatesa Perumal Thirukhoil ,Chennai ,Selakarbetta ,Pairagi Madam ,Chief Minister ,BM G.K. Stalin ,Pyraki Monastery ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்