×

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து 16 வாகனங்களை தகுதி நீக்கம் செய்தார் போக்குவரத்து அலுவலர்

நாமக்கல்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர்கள், போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் உள்ள பேருந்துகளில் அனைத்தும் சரியானதாக உள்ளதா என்றும் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏற்றதாக உள்ளதாக பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராசிபுரம் வட்டார போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வாகனங்களில் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்; அதில் 16 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்று போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்தார்.

வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவ-மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து 16 வாகனங்களை தகுதி நீக்கம் செய்தார் போக்குவரத்து அலுவலர் appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Namakkal ,Tamil Nadu ,Namakkal District Private School ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...