தூத்துக்குடி: கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை டிட்கோ தொடங்கியுள்ளது.
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை டிட்கோ கோரியுள்ளது. கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டைமலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான டெண்டர்களை ஆன்லைனில் டிட்கோ வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் https://tidco.com & www.tntenders.gov.in என்ற இணையதளங்களில் இருந்து டெண்டரைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது டிட்கோ appeared first on Dinakaran.