
- இளையோர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி
- பாக்கிஸ்தான்
- ஓமான்
- ஜூனியர் ஆசியா கோப்பை ஹாக்கி
- ஆசியக் கோப்பை ஹாக்கி
- தின மலர்
ஓமன்: நடப்பாண்டின் ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வசதியுள்ளது நம் இந்திய அணியின் இளம்படை.
10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் நகரில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்தியா 2 கோல்களையும், பாகிஸ்தான் ஒரு கோலையும் அடித்தன.
போட்டி தொடங்கிய 13ஆவது நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், 20ஆவது நிமிடத்தில் அரைஜீத் சிங் ஹுன்டாலும் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு வலு சேர்த்தனர். இறுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபாரமாக வென்றது.
இந்த வெற்றியின் மூலம், போட்டியில் அதிக பட்டங்களை வென்ற இந்திய அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்திய கோல்ட்ஸ் அணி இதற்கு முன் 2004, 2008 மற்றும் 2015ல் பட்டம் வென்றிருந்தது, பாகிஸ்தான் 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது.
இதையடுத்து ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
The post ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய இளம் படை appeared first on Dinakaran.