×

தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

சென்னை: பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு கண்காணிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தெடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 8 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், மேலும் 4 பேர் கவலைக் கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது, அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள், அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..! appeared first on Dinakaran.

Tags : Government ,Tamil Nadu ,Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisamy ,Edappadi Palanisamy ,
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து