×

நூற்றாண்டு விழாவையொட்டி கூர் எல்லையில் கலைஞர் நினைவு வளைவு

நாகப்பட்டினம், ஜூன்2: நாகப்பட்டினம் நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:சித்ரா:
நாகப்பட்டினத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைய நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோருக்கு நகர்மன்றம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் நாகப்பட்டினத்தில் அமையவுள்ள பஸ்ஸ்டாண்டிற்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும். இதை நகர்மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றார். இந்த கருத்தை அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.

செந்தில்குமார் (துணைத்தலைவர்): நாகூர் தர்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே நாகூர் நகர நுழைவுவாயில் பகுதியான வெட்டாறு பாலம் அருகில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்க வேண்டும். நாகூர் பகுதியில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு புதிதாக அமைக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆய்வு செய்து அமைக்கப்படுகிறதா என தெரிவிக்க வேண்டும் என்றார்.
விஜய்கார்த்தி(ஆணையர்): மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கு முன்பு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.

பரணிகுமார்: நாகப்பட்டினம் நகர பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய புதிதாக குழாய்கள் பதிக்கப்படவுள்ளது. மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு குழாய் பதிக்கும் பணிகளை முடிக்க வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் போது வரி விதிப்பும் செய்ய வேண்டும். அப்பொழுது தான் எதிர்காலங்களில் முறைகேடு நடப்பது தடுக்கப்படும் என்றார்.

ஆணையர்: நாகப்பட்டினம் மறைமலை நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து பகுதிகளிலும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.முகம்மதுநத்தர்:நாகப்பட்டினம் நகராட்சி பகுதியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற ரூ.1 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கீடு செய்து 23 இலகு ரக வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

கவிதா: நாகப்பட்டினத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமையவுள்ள இடம் ஊராட்சி எல்லையில் உள்ளது. இந்த இடத்தை நகராட்சி எடுத்து கொள்ளுமா என தெரிவிக்க வேண்டும்.
தலைவர்: பஸ்ஸ்டாண்ட் அமையவுள்ள இடத்தை நகராட்சி விலை கொடுத்து வாங்கி நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post நூற்றாண்டு விழாவையொட்டி கூர் எல்லையில் கலைஞர் நினைவு வளைவு appeared first on Dinakaran.

Tags : Artist Memorial Arch ,Coor ,Nagapattinam ,Nagapattinam Municipal Council ,Municipal ,Marimuthu ,Kur ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்