×

திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் தேதி வருகை

திருவாரூர், ஜூன் 2: திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 5ம் தேதி வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என திமுக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் கட்சி அலுவலகத்தில் நேற்று மாவட்ட அவை தலைவர் தன்ராஜ் தலைமையிலும், பொருளாளர் வெங்கடேசன், பொறியாளர் அணி மாநில அமைப்பாளர் துரைசரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் விளக்கி பேசினார்.

இதில் நாளை (3ந் தேதி) நடைபெறும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 100வது பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் வழங்குவதுடன் சென்னையில் நடைபெறும் விழாவில் மாவட்டத்திலிருந்து அதிகம்பேர் கலந்து கொள்வது, புதிய உறுப்பினர் சேர்க்கையினை விரைந்து முடித்து தலைமை கழகத்தில் ஒப்படைப்பது, வரும் 20ந் தேதி திருவாரூரில் நடைபெறும் கலைஞர் கோட்டகம் திறப்பு விழாவில் திருவாரூர் ஆழிதேர் திருவிழா போன்று சிறப்பாகவும், குடும்ப விழாவாகவும் நடத்துவது, மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கு தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது, மேலும் வரும் 5 மற்றும் 6 தேதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக 5ந் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முத்துப்பேட்டை கார்த்திக், ராமகிருஷ்ணன், சாந்திபாஸ்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், ஆடலரசன், ஆர்.எஸ்.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் தியாகபாரி, செந்தில் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் நகர, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் நகர செயலாளர் வாரைபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா நன்றி கூறினார்.

The post திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் தேதி வருகை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tiruvarur district ,Tiruvarur ,M.K.Stalin ,
× RELATED அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு...