×

திருச்சியில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி, ஜூன் 2: கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விலக்கி கொண்டாலும், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பேரில் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று (2ம் தேதி) சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர பகுதிகளில் இன்று (2ம் தேதி) சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்று காலை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பீமநகர் காஜாப்பேட்டை, பீரங்கி குளம் சவுராஷ்டிரா தெரு, இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு, எடமலைப்பட்டிபுதூர் புதிய காலனி, இருதயபுரம் சங்கிலியாண்டபுரம் அங்கன்வாடி மையம், காமராஜ் நகர் சோழன் தெரு, காட்டூர் ஜெகநாதபுரம், மேலகல்கண்டார் செல்லியம்மன் கோவில், பெரியமிளகுபாறை கீழ தெரு, ராமலிங்கநகர் சீனிவாச நகர், ரங்கம் கண்டிதெரு, சுப்ரமணியபுரம் காஜாலை எல்எஸ்பி காலனி, தெப்பக்குளம் மலைக்கோட்டை மருந்தகம், தென்னூர் ஜெனரல் பஜார், திருவெறும்பூர் கீழகல்கண்டார் கோட்டை, திருவானைக்கோவில், திம்மராயசமுத்திரம், உறையூர் எழில்நகர் ஆகிய பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட உள்ளது.

அதுபோல் மாலையில் இதே ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான ஆலம்தெரு, மன்னார்பிள்ளை தெரு, கத்திரிதோப்பு, இந்திராநகர், ஆசாரி தெரு, மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், கென்னடி தெரு, ஸ்டாலின் நகர், தபால் அலுவலக தெரு, புதுத்தெரு, குமரன்நகர், வசந்தநகர், டிவிஎஸ் நகர் ராஜம்தெரு, மலைவாசல், பட்டாபிராமன் பிள்ளை தெரு, ஆலத்தூர், புதிய காலனி, கண்ணாரதெரு ஆகிய இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடக்கிறது. இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திருச்சியில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் appeared first on Dinakaran.

Tags : Trichy ,central health department ,Tamil Nadu ,
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...