×

வைகாசி பிரதோஷ விழா

 

பெரியகுளம், ஜூன் 2: பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் வைகாசி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகார நந்தீஸ்வரருக்கும், லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இப்பூஜை 108 லிட்டர் பால் மற்றும் தயிர், செந்துருக்கம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகைகள் மற்றும் தாமரைப் பூ, மல்லிகைப்பூ, அரளிப்பூ, செம்பருத்தி, ரோஜாப்பூ ஆகியவை கொண்டு நடத்தப்பட்டது. இக்கோயிலில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல், புளிசாதம், லெமன் சாதம் உள்ளிட்ட பிரசாதங்களை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர் மகாராஜன் செய்ந்திருந்தார்.

The post வைகாசி பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Vaikasi Pradosha Festival ,Periyakulam ,Echamalai Mahalakshmi temple ,Vaikasi Pradosha ,Athikara Nandeeswarar ,
× RELATED பெரியகுளம் குப்பை கிடங்கில் தீ 3...